தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி முத்தையாபுரம், குலசேகரன்பட்டினம் மற்றும் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதன்படி இன்று (02.11.2023) முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லிஅரசன் மற்றும் போலீசார் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தர்நகர் மெயின்ரோடு பகுதியில் பொதுமக்களிடமும், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் போலீசார் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் ECR ரோடு பகுதியில் பொதுமக்களிடமும், குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அழகப்பபுரம் பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுவரை 3721 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,17,391 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.