சிறுமி மீது அம்­மோ­னியம் சொல்­யூசன் பாட்­டிலை வீசிய க­ருப்­பட்டி காபி ஊழியர் கைது

154
சென்னை, கிண்டி பகுதியில் சிறுமி மீது அமோனியம் சொல்யூசன் பாட்டிலை வீசிய கருப்­பட்டி காபி முன்னாள் ஊழி­­யரை நபரை போலீசார் கைது செய்­த­னர்.
சென்னை, புனிததோமையர் மலை, நசரத்புரம், இந்திராநகர் 6 வது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (43). தனது குடும்பத்துடன் ஈக்காட்டுதாங்கல், மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்., கணேஷ்  19.05.2024 இரவு ஈக்காட்டுதாங்கல், மேட்ரோ ரயில் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் அமர்ந்து தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் தான் கொண்டு வந்­த பாட்டிலை அங்கு உட்கார்ந்திருந்த கணேஷ் அருகே வீசியுள்ளார். பாட்டில் துண்டு சிதறி கணேஷின் 5 வயது மகள் கையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. காயம்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து கணேஷ் கிண்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது,. கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து ஈரோடு, பவா­னியைச் சேர்ந்த ராஜா (37) என்ற நபரை கைது செய்­த­னர்.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜா மற்றும் கணேஷ் ஆகிய இருவரும் ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள கருப்பட்டிகாபி கடையில் ஒன்றாக வேலை செய்து  பிளாட்பாரத்தில் தங்கி வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜா கடைக்கு வந்த வாடிக்கையாளரின் செல்போனை திருடியுள்ளார். இது குறித்து கணேஷ் கருப்பட்டி காபி ஷாப் மேலாளரிடம் தெரிவித்ததின்பேரில் ராஜாவை மேற்படி கடையிலிருந்து வேலையிலிருந்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் ராஜா திருநெல்வேலி மாவட்டத்தில் திருடு போன இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வந்ததை, கணேஷ் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, கணேஷை பயமுறுத்தும் நோக்கத்தில் அமோனியம் சொல்யூசன் அடங்கிய பாட்டிலை மேற்படி பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த கணேஷ் குடும்பத்தினர் மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது.     விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ராஜா இன்று (20.05.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.