சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக ஐஜி செந்தில்குமாரி நியமனம்

174

தமிழகம் முழுவதும் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

சென்னை மத்தியக்குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்த மகேஷ்வரி நெல்லை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜி செந்தில்குமாரி சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு புதிய கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமாரி எம்எஸ்சி முதுநிலைப் பட்டமும், பிஎச்டி முடித்து டாக்டர் பட்டமும் பெற்றவர். குரூப்ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக காவல் பணியில் சேர்ந்த இவர் பின்னர் படிப்படியாக பதவி உயர்து டிஐஜியான அவர் கடந்த ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2004ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான செந்தில்குமாரி தமிழக காவல்துறையில் நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜியாக இருந்த அவர் தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.