சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் “நல்லிணக்க நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில், இன்று (18.08.2023) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் மகேஸ்வரி, காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) கயல்விழி, காவல் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள். ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் “நல்லிணக்க நாள் உறுதிமொழியை” ஏற்றனர்.