ஆவடி கமிஷனர் சங்கர் தலைமையில் நடந்த குட்கா ரெய்டு: 23 கடைகளில் 113 கிலோ பறிமுதல்

150

சென்னை, ஆவடியில் போலீஸ் கமிஷனர் சங்கர் நேரடியாக சென்று குட்கா ரெய்டில் ஈடுபட்டதில் 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

‘போதையில்லா தமிழகம்’ என்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் போலீசார் வாரந்தோறும் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனைகள் நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் அந்தந்த காநேற்று அதன் தொடர்ச்சியாக கமிஷனர் சங்கர் குட்கா விற்பனை செய்யப்படுவது தொடர்பாக அவரே நேரில் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார். இந்த சோதனையில் கமிஷனர் சங்கர் நேரடி மேற்பார்வையில் ஒரே சமயத்தில் 150க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குட்கா ரெய்டில் ஈடுபடுத்தப்பட்டனர். அம்பத்தூர். ஆவடி, செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, ரெட்ஹில்ஸ், எண்ணூர், மணலி, போரூர், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் 146 கடைகளில் நடத்திய கடைகளில் 23 கடைகளில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 23 கடைகளும் பூட்டி வைக்கப்பட்டு விற்பனையை நிறுத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தச் சோதனையின் போது மொத்தம் 113 கிலோ 850 கிராம் குட்கா, கூல்-லிப் மற்றும் பிற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளை மீறியவர்களுக்கு ரூ. 1,07,000- அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.