பெண் உட்பட 9 பேர் மீது குண்டாஸ்: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நடவடிக்கை

193

சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 01.01.2023 முதல் 06.12.2023 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 440 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 106 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 78 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 13 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம்படுத்திய 4 குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் 1 குற்றவாளி என மொத்தம் 648 குற்றவாளிகள் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டம் மற்றம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கடந்த 30.11.2023 முதல் 06.12.2023 வரையிலான ஒரு வாரத்தில் 1 பெண் உட்பட 9 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றவாளிகள் 1. விஜய் (எ) ஜாக்கி, வ/21, த/பெ.ரவி, கொடுங்கையூர், சென்னை என்பவர் கடந்த 14.11.2023 அன்று பல்வேறு ஆட்டோக்களின் கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக, P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்திலும்,  2.மதன் (எ) ஜெயகுமார், வ/26, த/பெ.மணிமாறன், பழைய வண்ணாரப்பேட்டை,  சென்னை என்பவர் கடந்த 02.11.2023 அன்று வழிப்பறி செய்த குற்றத்திற்காக, H-1 வண்ணாரப்பேட்டை    காவல் நிலையத்திலும் கைது செய்யப்பட்டனர். மேலும் அப்பு (எ) புதூர் அப்பு, வ/40, த/பெ.சுபாஷ், கோடம்பாக்கம், சென்னை என்பவர் கடந்த 11.10.2023 அன்று  கிழங்கு சரவணன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, T-4 மதுரவாயல்  காவல் நிலையத்திலும்,  4.பிரகாஷ் (எ) சித்திக் அலி, வ/36, த/பெ.சிவஞானம், சின்ன திருப்பதி போஸ்ட், சேலம் மாவட்டம் மற்றும் 5.ஷாகின், பெ/வ-40, க/பெ.சித்திக்அலி, சின்ன திருப்பதி போஸ்ட், சேலம் மாவட்டம் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 13.11.2023 அன்று தங்கநகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற குற்றத்திற்காக,               K-10 கோயம்பேடு காவல்  நிலையத்திலும், 6.ஹரிவிக்னேஷ், வ/26, த/பெ.கண்ணன், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் என்பவர் கடந்த 05.11.2023 அன்று கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக, K-11 CMBT காவல் நிலையத்திலும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

 மேலும், 7.ஜெகநாத், வ/31, த/பெ.குணசேகரன், வியாசர்பாடி, சென்னை என்பவர் கடந்த 19.11.2023 அன்று குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக, C-1 பூக்கடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும், 8.சுரேஷ், வ/34, த/பெ.தங்கபாண்டி, கோயம்பேடு, சென்னை, 9.மூர்த்தி, வ/50, த/பெ.நாகப்பன், அரும்பாக்கம், சென்னை ஆகிய இருவரும் கடந்த 19.11.2023 அன்று, குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக, T-4 மதுரவாயல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

மேற்படி குற்றவாளிகளின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் விஜய் (எ) ஜாக்கி, மதன் (எ) ஜெயகுமார், அப்பு (எ) புத்தூர்அப்பு, பிரகாஷ் (எ) சித்திக்அலி, ஷாகின், ஹரிவிக்னேஷ் ஆகிய 6 நபர்களை கடந்த 01.12.2023 அன்றும்,  ஜெகநாத் என்பவரை கடந்த 02.12.2023 அன்றும், சுரேஷ் மற்றும் மூர்த்தி ஆகிய 2 நபர்களை நேற்றும் (06.12.2023) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், மேற்படி 9 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது.