சென்னை செம்பியத்தில் காவலர் குடும்பத்தினருக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

204

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (08.12.2023) காலை செம்பியம் காவலர் குடியிருப்புக்கு காவல் அதிகாரிகளுடன் நேரில் சென்றார். அங்கு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்து, காவலர் குடும்பத்தினரிடம்

குறைகளை கேட்டறிந்தார். பின்பு காவலர் குடும்பத்தினரின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

அவருடன் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.