கமி­ஷனர் சங்கர் நடத்­திய கஞ்சா, குட்கா ரெய்டு: 132 வழக்­கு­களில் 204 பேர் கைது; 349 கிலோ கஞ்சா பறி­மு­தல்

135

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால்தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் கமி­ஷனர் சங்கர் உத்­த­ரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

நேற்று (09.05.2024) ஆவடி காவல் ஆணையரகத்திற்குட் பட்ட 20 வீடுகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட கடைகளில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் தொடர்பான அதிரடி சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று 10.05.2024 எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுப்பட்ட நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து 34 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் மூடி சீல் வைக்கப்பட்டது. அம்பத்தூர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் எல்லைக்குட்பட்ட 3 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் மூடி சீல் வைக்கப்பட்டதை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் இந்த வருடத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை செய்ததாக 132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 204 நபர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 349 கிலோ கஞ்சா மற்றும் 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 12 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ்சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்,.

இது போன்று குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 255 எதிரிகள் கைது செய்யப்பட்டு சுமார் 2628 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் 8 வாகனங்கள் பறிமுதல் செய்து ரூ. 55,80,000- அபாரதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்கள் மீதுகுண்டர் தடுப்புசட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.