தூத்துக்குடி மாவட்டத்தில், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி எஸ்பி டாக்டர் எல் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி டிஎஸ்பி (பொறுப்பு) சிவசுப்பு மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அலெக்ஸ்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (16.01.2024) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் to அத்திமரப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் தூத்துக்குடி முள்ளக்காடு தேவிநகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ் (எ) 2ஜிபி ரமேஷ் என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரமேஷ் (எ) 2ஜிபி ரமேஷ் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உட்பட 9 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.