தூத்துக்குடியில் 586 பாட்டில்கள் பறிமுதல்: 42 வழக்குகள் பதிவு: எஸ்பி பாலாஜி சரவணன் நடவடிக்கை

147

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 மதுபாட்டில்கள், ரொக்கப்பணம் ரூபாய் 14,820- மற்றும் ஒரு இருச்சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று (16.01.2024) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் அனைத்து டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் சட்டவிரோதமா மது விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனை நடத்தினர். காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டதில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 586 மதுபாட்டில்கள், ரொக்கபணம் ரூபாய் 14,820 மற்றும் ஒரு இருச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.