ஐஸ்ஹவுஸ் காவல்நிலைய வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கனம் நீதிமன்றம் தீர்ப்பு.

126

சென்னை, திருவல்லிக்கேணி, B.V.நாயக்கன் தெருச் சேர்ந்­தவர் பாபு. பெட்­டிக்­கடை நடத்தி வரு­கிறார். இவ­ரது கடைக்கு வந்த 2 பேர் கத்­­தியைக் காட்டி மிரட்டி பாபு­விடம் பணம் கேட்டு மிரட்­டி­யுள்­ளனர். அவர் பணம் தர மறுத்­ததால் இரண்டு நபர்­களும் பாபுவை கத்தியால் தாக்கியுள்ளனர். மேலும் கடையில் இருந்து பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்­டனர். 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி­யன்று நடந்த இந்தச் சம்­பவம் தொடர்­பாக பாபு அளித்த புகார் தொடர்­பாக மெரீனா போலீசார் வழக்­குப்­ப­திவு செய்து விசா.ரணை நடத்­தினர். அத­னை­ய­டுத்து பாபுவின் கடையில் வழிப்­ப­றியில் ஈடு­­பட்ட திரு­வல்­லிக்­கேணி விஆர் பிள்ளை தெருவைச் சே்ந்த பாலாஜி (வயது 30), நம்­மாழ்­வார்­பேட்­டையைச் சேர்ந்த யுவராஜ் (34) ஆகிய இரு­வ­ரையும் கைது செய்­து கோர்ட்டில் ஆஜர்­ப­டுத்தி சிறையில் அடைத்­த­னர்.

இந்த வழக்கு விசா­ரணை 5வது கூடுதல் அமர்வு நீதி­மன்­றத்தில் நடந்து வந்­தது. நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று (23.04.2024) இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. எரி பாலாஜி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மற்றொரு எதிரியான யுவராஜ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்

மேற்படி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.