சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அரசமைப்பு நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி கூடுதல் கமிஷனர் தலைமையில் நடந்தது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் இன்று (26.11.2025) காலை 11.00 மணியளவில் வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் விஜயேந்திர பிதாரி தலைமையில் துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் “அரசமைப்பு நாள் (Constitution Day) உறுதிமொழி” எடுத்துக் கொண்டனர்.