சென்னை, நகர காவல் ஆணையாளர் காவல் ஆணையரகத்தில் இன்று நடந்த குறை தீர்ப்பு முகாமில் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களைப் பெற்றார்.
சுமார் 20 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 2 காவல் ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது சென்னை பெருநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் (நிர்வாகம்) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.