வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட் வழங்கிய கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

180

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ‘நம்ம ஹெல்மெட்‘ என்ற போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார். தலைக்கவசம் அணிவதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, “நம்ம ஹெல்மெட்” விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அதிகாரிகளால் 19.08.2023 முதல் சென்னை நகரில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக (26.08.2023), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று (26.08.2023) காலை, அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் Ladnun Nagarik Parishad (LNP) ஒருங்கிணைந்து நடத்தும் ‘‘நம்ம ஹெல்மெட்” என்ற தலைகவச விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தலைக்கவசம் அணியாமல் பயனிக்கும் 150 இருச்சக்கர வாகன ஓட்டுநர்கள்/ உடன் பயனிப்பவர்களுக்கு தலைகவசம் வழங்குகிறார்.

மேலும், தலைகவசம் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு காணொளி காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு உதவிய LNP அதிகாரிகளின் அற்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்காக பாராட்டப்பட்டனர். இந்நிகழ்சியில் சென்னை நகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் மற்றும் போக்குவரத்து துணைக்கமிஷனர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.