பொது­ம­க்­க­ளுக்கு ஆபத்தில் உத­விய சென்னை பெரு­ந­கர காவல்­துறை:

131

சென்னை பெருநகர காவல் 12 காவல் மாவட்ட சரக பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளில் அவசர உதவி தேவைப்பட்டு, அழைக்கப்படுகின்ற அவசர அழைப்புகளை சென்னை பெருநகர காவல்துறை வான்செய்தி மூலம் தகவல்கள் பரிமாறப்பட்டு, காவல் உதவி ரோந்து வாகனங்கள் மூலமாகவும் உடனடியாக அழைத்த இடம் சென்று உதவி வருகின்றனர்.

ஒவ்வொரு அழைப்புகளையும் உயிர்காக்கும் அழைப்புகளாக கருதி, சுமார் 5 நிமிடத்திலிருந்து 10 நிமிடத்திற்குள்ளாக துரிதமாக களமிறங்கி கை கொடுத்து பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டு வருகின்றனர். அன்றாடம் சுமார் 500க்கும் மேற்பட்ட அழைப்புகளில் சென்னை பெருநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு உதவி செய்து பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு வருகிறது.

* சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (38) என்பவர் கடந்த 06.05.2025 அன்று சென்னை பெருநகர காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டார். RAPIDO செல்போன் செயலி மூலம் கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்த 13 வயது மகனை பத்திரமாக வீட்டில் விடும்படி உதவி கேட்டார். உடனே கட்டுப்பாட்டறை போலீசார் கால் டாக்ஸி ஓட்டுநரை தொடர்பு கொண்டு புகார்தாரரின் மகனை பத்திரமாக விரைந்து வீட்டில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் சிறுவன் பத்திரமாக வீட்டில் சேர்க்கப்பட்டார்.
* சென்னை, பிராட்வே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா (28) என்பவர் கடந்த 10.05.2025 அன்று OLA ஆட்டோ புக் செய்து பயணம் செய்த போது Documet களை மறதியாக ஆட்டோவில் தவற விட்டு சென்றுள்ளார். உடனே கீர்த்தனா சென்னை பெருநகர காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனே OLA ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் தொடர்பு கொண்டு பயணி தவறவிட்ட Document களை ஒப்படைக்குமாறு கூறியதின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் கீர்த்தனாவிடம் Document களை பத்திரமாக ஒப்படைத்தார்.

* சென்னை, சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சக்ரதாமி (23) என்பவர் கடந்த 11.05.2025 அன்று RAPIDO இருசக்கர வாகனம் புக் செய்து பயணம்செய்தார். அப்போது, இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளாகி, பயணி சக்ரதாமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. சக்ரதாமி காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். கட்டுப்பாட்டாறை போலீசார் தேனாம்பேட்டை ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார் சக்ரதாமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து முதுலுதவி சிகிச்சையளித்து உதவி செய்தனர். சக்ரதாமி தற்போது நலமாக உள்ளார்.

* சென்னை, ராயப்பேட்டை பகுதியில் Uber நிறுவன டெலிவரி ஊழியர் மோகன் (38) என்பவர் கடந்த 13.05.2025 அன்று இரவு சுமார் 11 மணியளவில் ராயப்பேட்டையில் டெலிவரி செய்தபோது லிப்ட்டில் சிக்கி கொண்டதாக அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். கட்டுப்பாட்டறை போலீசார் விரைந்து செயல்பட்டு இராயப்பேட்டை ஜிப்சி ரோந்து வாகன போலீசாருக்கு தகவல் தெரிவத்துள்ளனர். ரோந்து போலீசார் சில நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கி தவித்த டெலிவரி ஊழியர் மோகனை பத்திரமாக மீட்டனர்.

சென்னை பெருநகர காவல்துறை, அவசர அழைப்புகளுக்கு பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து உதவி வருகின்றது. எனவே, அவசர அழைப்புகளுக்கு காவல் அவசர உதவி எண் 100, பெண்கள் உதவி மைய எண் (1091), குழந்தைகள் உதவி மைய எண் (1098), மூத்த குடிமக்கள் உதவி மைய எண். (1253), பந்தம் திட்டத்தின் கீழ் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான உதவி எண்கள் (9499957575), காவல் ஆணையாளர் குறுஞ்செய்தி (SMS) புகார்கள் (9500099100), மற்றும் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நபர்களை மீட்பதற்கான “காவல் கரங்கள்” உதவி எண் (9444717100) மூலம் தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.