உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற சென்னை நகர காவல்துறை: கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வாழ்த்து
உலக அளவிலான தடகள போட்டியில் பதக்கங்கள் சென்ற சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டு போட்டிகள்- 2023 (World Police & Fire Games – 2023), கனடா நாட்டிலுள்ள வின்னிபெக் நகரில் கடந்த 28.07.2023 முதல் 06.08.2023 வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் அகில இந்திய காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொது பிரிவில் (Regular) 4 காவல் ஆளிநர்கள் தமிழக காவல்துறை சார்பாக கலந்து கொண்டனர். மேலும், மூத்தோர் (Veterans) பிரிவில் தமிழக காவல்துறை சார்பாக 15 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 2 காவல் ஆளிநர்கள் பொது பிரிவிலும் (Regular), மூத்தோர் பிரிவில் ((Veteran) 6 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களும் அடங்குவர். ஏறக்குறைய 70 நாடுகளிலிருந்து சுமார் 8,500 வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் சென்னை பெருநகர காவல்துறையைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், 16 தங்கம், 8 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்று தமிழக காவல்துறைக்கும், சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்தனர்.

சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மேற்படி போட்டியில் கீழ்கண்ட பதக்கங்களை வென்றனர்.

