போக்குவரத்து காவலர்களுக்­கு நீர் மோர், தொப்பி, கூலிங் கிளாஸ்: ஆவ­டி கமிஷ­ன­ர் சங்­கர் வழ­ங்­கி­னா­ர் 

174
கோடை காலம் தொடங்கி இருப்பதால் வெயிலில் பணி செய்யும்  போக்குவரத்து காவலர்களின் நலனை  கருத்தில் கொண்டு, இன்று (01.03.2024) அம்பத்தூர் ஆவடி சாலையில் (சிங்கப்பூர் ஷாப்பிங் சந்திப்பு) போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர்தொடங்கி வைத்தார். போக்குவரத்து காவல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திற்கு ஏதுவாக சிறப்பு தொப்பி (Pith Hat), கூலிங் கிளாஷ் உள்ளிட்ட வெயிலின் தாக்கம் குறைக்கும் உபகரணங்களை  போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்  பொதுமக்களுக்கு போக்குவரத்து சாலை  விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காவல் துணை ஆணையாளர் ஜெயலட்சுமி,   பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் போக்குவரது காவல் உதவி ஆணையாளர் ராமசந்திரன் மற்றும் அம்பத்தூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த போக்குவரத்து  அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டன­ர்.