721 பவு­ன் தங்க நகைகள் திரு­டி­ய வேலைக்கார பெண் உட்பட 3 பேர் கைது

171

சென்னை, தி.நகர் பகுதியில் வீட்டில் திருடிய வேலைக்கார பெண் உட்பட 3 நபர்களை காவ­ல் து­றை­யி­ன­ர் கைது செய்­த­ன­ர். 24 சவரன் தங்க நகைகள், 560 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 ஐபோன் பறிமுதல் செய்­ய­ப்­ப­ட்­ட­து.

 

சென்னை, தி.நகர், சாரங்கபாணி தெருவில் வசித்து வரும் பங்கஜ் குமார் (32) என்பவரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை பார்த்தபோது, வளையல், நெக்லஸ், தங்கச்சங்கிலி உட்பட சுமார் 721 பவுன் தங்கநகைகள் மற்றும் ஐபோன் ஆகியவை காணாமல் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து பங்கஜ்குமார் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை

மேற்கொள்ளப்பட்டது. சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அவ்வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் விஜயலஷ்மி (22), அவரது கணவரின் உறவினர் வருண்குமார், ஜஸ்டின் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். விசாரணையில், விஜயலஷ்மி மேற்படி வீட்டில் சில வருடங்களாக வேலை செய்து வந்தபோது, 2021ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக புகார்தாரர் வீட்டிலிருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ஐபோன் ஆகியவற்றை திருடிச் சென்று, அவரது கணவரின் தம்பியான 2வது எதிரி வருண்குமார் மூலம் 3வது எதிரி ஜஸ்டின் என்பவரிடம் மற்றும் பல இடங்களில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது.

அதன்பேரில், மேற்படி நபர்களிடமிருந்து 24 சவரன் தங்கநகைகள், 560 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 1 ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர். நேற்று (29.02.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.