தமிழகத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு மண்டல ஐஜியாக பவானீஸ்வரி, உளவுப்பிரிவு டிஐஜியாக ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:–
ஊர்க்காவல் படை கூடுதல் டிஜிபி பிகே ரவி மின்வாரிய ஊழல் ஒழிப்புப்பிரிவிற்கும். அங்கிருந்த கூடுதல் டிஜிபி வன்னியப்பெருமாள் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவிற்கும், கூடுதல் டிஜிபி ராஜீவ்குமார் போலீஸ் பயிற்சிக் கல்லூரிக்கும், நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி பாலநாகதேவி பொருளாதாரக்குற்றப்பிரிவிற்கும், அங்கிருந்த அபின்தினேஷ் மோடக் மாநில குற்ற ஆவணக்காப்பகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மாநில குற்ற ஆவணக்காப்பக கூடுதல் டிஜிபி நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்புப்பிரிவு ஐஜி பிரமோத் குமார் கரூர் காகித ஆலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

பிகே ரவி
அதே போல சிவில் சப்ளை சிஐடி ஐஜி காமினி திருச்சி போலீஸ் கமிஷனராகவும், திருச்சி போலீஸ் கமிஷனர் சத்யப்பிரியா பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும்,

பவானீஸ்வரி
அங்கிருந்த ஆசியம்மாள் டிஜிபி அலுவலக தலைமையிட ஐஜியாகவும், சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன் மதுரை போலீஸ் கமிஷனராகவும், அங்கிருந்த

நரேந்திரன் நாயர்
நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐஜியாகவும், தென்மண்டல ஐஜி ஆஸ்ரா கார்க் வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும், நவீனமயமாக்கல் ஐஜி சந்தோஷ்குமார் லஞ்ச ஒழிப்புப்பிரிவு இணை இயக்குநராகவும், லஞ்ச ஒழிப்புப்பிரிவு இணை இயக்குநர் பவானீஸ்வரி கோவை மேற்கு மண்டல ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுதாகர்
மேற்கு மண்டல ஐஜி சுதாகர் சென்னை நகர போக்குவரத்துப்பிரிவு கூடுதல் கமிஷனராகவும், அங்கிருந்த கபில் குமார் சரத்கர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக தலைமையிட கூடுதல் கமிஷனராகவும்,

ஆசியம்மாள், ஆஸ்ரா கார்க்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜோஷி நிர்மல் குமார் தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் இயக்குநராகவும்,

ஜெயகவுரி
அங்கிருந்த ஜெயகவுரி ஆயுதப்படை ஐஜியாகவும், கடலோர காவல் குழும டிஐஜி கயல்விழி,

லோகநாதன்
சென்னை நகர தலைமையிட இணைக்கமிஷனராகவும், அங்கிருந்த சாமுண்டீஸ்வரி வடசென்னை இணைக்கமிஷனராகவும்,

ரம்யாபாரதி
அங்கிருந்த ரம்யாபாரதி மதுரை டிஐஜியாகவும், மதுரை டிஐஜி பொன்னி காஞ்சிபுரம் டிஐஜியாகவும்,

பகலவன்
காஞ்சிபுரம் டிஐஜி பகலவன் திருச்சி டிஐஜியாகவும், திருச்சி டிஐஜி சரவண சுந்தர் கோவை சரக டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொன்னி
மேலும் டிஜிபி அலுவலக தலைமையிட டிஐஜி அபிஷேக் திக்ஷித் சென்னை நகர வடக்கு போக்குவரத்து இணைக்கமிஷனராகவும்,

ராஜேந்திரன்
நெல்லை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தமிழக உளவுப்பிரிவு டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.