இணையதள குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்திய ஆவடி காவல் ஆணையரகம்
ஆவடி காவல் ஆணகம் சைபர்கிரைம் போலீசார் இந்து கல்லூரியுடன் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இந்த பேரணியை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு பேரணியில் கலந்துக்கொண்டார்.
அதிகரித்து வரும் இணையதள குற்றங்களின் வாயிலாக பண இழப்பு, மிரட்டல், பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் என பல்வேறு வகையான குற்றங்கள் பொதுமக்களுக்கு நடந்து வருகிறது. இதைத் தடுக்க, பொதுமக்கள் தங்களது வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம், ட்விட்டர், பணப் பரிமாற்ற விண்ணப்பங்கள், சமூக வலைதள விளம்பரங்கள், பகுதி நேர வேலை விளம்பரங்கள் போன்றவற்றில் விழிப்புடன் இருந்து இதுபோன்ற குற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் இந்நிகழ்ச்சியில் அறிவுரை வழங்கினார்.
இவ்விழிப்புணர்வு பேரணியில் ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையாளர் பெருமாள், இணையதள குற்றப்பிரிவு கூடுதல் காவல் துணை ஆணையாளர் நடேசன், மற்றும் இந்து கல்லூரி முதல்வர் உட்பட 200- க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலந்துக்கொண்டு பேரணியாகச் சென்றனர்.மேலும் ஆவடி பேருந்து நிலையம் அருகில் ஆவடி காவல் ஆணையாளர் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.