சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தினை தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறை ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. இன்று (26.06.2023) போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச விழிப்புணர்வு தினத்தினை அமலாக்க பணியகம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட இயக்கமும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள 5,000 முக்கிய சாலை சந்திப்புகளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
இந்த உலக சாதனை நிகழ்வு தமிழக அமலாக்கப்பிரிவு போலீஸ் கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் சென்னை அண்ணாநகரில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுடன் இணைந்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பங்கு கொண்ட மாணவர்கள் போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். ஐஜி ராதிகா உடன் இருந்தார்.