திருநின்றவூரில் வெள்ள நிவாரணம் வழங்கிய ஆவடி காவல் ஆணையரகம்

170

சென்னை, திருநின்றவூரில் ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று (09.12.2023) ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட திருநின்றவூர், பெரியார் நகர் பகுதிக்கு கமிஷனர் சங்கர் நேரடியாகச் சென்றார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை காவலர்கள் மூலம் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி துரித நடவடிக்கை மேற்கொள்ள சங்கர் உத்தரவிட்டார்.