அடை­யாறு வங்­கியில் கடன் பெற்­று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபர் கைது: சென்னை மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் நட­வ­டிக்­கை

121

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள SBI வங்கியில் தொழில் கடன் பெற்று ரூ. 72.55 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்­த­னர்.

சென்னை அடை­யாறு, எஸ்­பிஐ வங்­கியின் முதன்மை மேலாளர் ஹெரால்டின் மினி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அரு­ணிடம் ஒரு புகார் மனு அளித்­தார். வேல்முருகன் என்பவர் Annai Casting Pvt Ltd., என்ற நிறுவனத்தின் பெயரில் தொழில் கடன் பெற்றார். அந்­தத் தொகையில் வாங்கிய இயந்திரங்களை தனது நிறுவனத்தில் Install செய்யாமலும், தொழிலை விரிவுபடுத்தாமலும் காலம் தாழ்த்தி வந்­துள்ளார். மேலும் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்தாமல் இருந்து வந்ததால் கடன் கணக்கானது வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது. வங்கிக் கடனில் பெற்ற இயந்திரங்கள் மற்றும் வாகனத்தை வங்கி தரப்பில் பறிமுதல் செய்து விடுவார்கள் என்பதால் அவற்றை மறைத்துள்ளார், ­மேலும் கடன் தொகையை தனது சொந்த செலவிற்காக பயன்படுத்தியுள்ளார். வங்கியில் பெற்ற கடன்தொகையை வங்கிக்கு திருப்பி செலுத்தாமல் வங்கிக்கு ரூ.72,55,834- இழப்பீடு செய்துள்ளார். அவர் மீது தக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறி­யி­ருந்­தார்.

இந்தப் புகார் மனு தொடர்­பாக சென்னை பெருநகர பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா மேற்­பார்­வை­யில், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை நடத்­தினர். இதில் எஸ்­பிஐ வங்கி சார்பில் அளித்த புகார் உண்மை என்­பது தெரி­ய­வந்­தது. அத­னை­ய­டுத்து தலைமறைவாக இருந்த கோடம்­பா­க­கத்தைச் சேர்ந்த வேல்­மு­ருகன் (வயது 45) என்­ப­வரை மத்­திய குற்­றப்­­பி­ரிவு போலீசார் இன்று கைது செய்த­னர். விசாரணைக்கு பின்னர் வேல்­மு­ருகன் நீதிமன்ற காவலுக்க உட்படுத்தப்பட்டார். மேற்படி எதிரியை கைது செய்த வங்கி மோசடி புலனாய்வு பிரிவு, காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் வெகுவாக பாராட்டினார்.