சென்னை வண்­ணா­ர­ப்­பேட்­டையில் ஒரு நம்பர் லாட்­டரி சீட்டு விற்ற இருவர் கைது

162

வண்ணாரப்பேட்டையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்­யப்­­பட்டு பணம் ரூ.24,600-, 5 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் காகித சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்­யப்­பட்­ட­ன.

சென்னை, வண்ணாரப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் (27.12.2024) வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை நெடுஞ்சாலை, கம்பெனி சத்திரம் தெரு சந்திப்பில் கண்காணித்தனர். அப்­போது அங்கு சிலர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து, சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரி­யவந்­தது. அத­யை­டுத்து லாட்­டரி சீட் விற்­பனை செய்த வண்­ணா­ரப்­பேட்­டை, இன்ஸ்பெர்க் சப்­ப­ரா­யுலு தெருவைச் சேர்ந்த ஜாகிர்பாஷா (49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.20,600/-, 3 செல்போன்கள் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எதிரி ஜாகிர் பாஷா விசாரணைக்குப் பின்னர் 27.12.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.ூ
மேலும் ஜாகிர் பாஷா கொடுத்த தகவலின்பேரில், H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய நாராயணன்(53) என்பவரை நேற்று (28.12.2024) கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.4,000/-, 1 இருசக்கர வாகனம், 2 செல்போன் மற்றும் துண்டு காகித சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நாராயணன் விசாரணைக்குப் பின்னர் நேற்று (28.12.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்