போலீஸ் கமி­­ஷனர் அருணுடன் என்­ஐஏ இயக்­குநர் சந்திப்பு

146

சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அருணை தேசிய புலா­னய்வு முகமை தென் மண்­டல இயக்­குநர் சந்­தித்து பேசி­னார்.

தேசிய புலனாய்வு முகமையின் தென் மண்­டல இயக்­குநர் சந்தோஷ் ரஸ்தோகி இன்று (29.08.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருணை நேரில் சந்தித்தார். காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமைக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் அவர் கலந்துரையாடினார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பல்வேறு பிராந்திய பிரச்சனைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர்.

மேலும், இரு துறைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தை வளர்ப்பதன் முக்கியத்தும் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய வழக்குகளை திறம்பட புலன் விசாரணை செய்ய ஏதுவாக சென்னை பெருநகர காவல் துறைக்கு NIA அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.