ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர் முகாம் நடைபெற்றது.
காவல் ஆணையரகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் போலீஸ் கமிஷனர் சங்கர் சங்கர் தலைமையில் திருமுல்லைவாயல், எஸ்எம் நகர் போலீஸ் கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. இந்த குறைதீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையரக கூடுதல் கமி
ஷனர் ராஜேந்திரன் மற்றும் காவல் துணை ஆணையாளர்கள் அய்மன் ஜமால், பாலகிருஷ்ணன் கலந்துக் கொண்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து 69 புகார் மனுக்களை பொது மக்களிடமிருந்து பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம்
தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார்கள். இக்குறை தீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையரகத்திற்குட் பட்ட காவல் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.