தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:– தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அங்கிருந்து மாற்றப்பட்டு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவணக்காப்பக கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் தாம்பரம் காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயராம் மாநில குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்குமார் அகர்வால் ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாகவும், சிபிசிஐடி கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன், நிர்வாகப்பிரிவு ஏடிஜிபியாகவும், வினித்தேவ் வாங்கடே தலைமையிட ஏடிஜிபியாகவும், சைபர்கிரைம் ஏடிஜிபி சஞ்சய் குமார் கடலோர காவல் குழுமத்துக்கும், அங்கிருந்த சந்தீப் மிட்டல் சைபர்கிரைமுக்கும், ராஜீவ்குமார் குழந்தைகள், பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவிற்கும், அங்கிருந்த தமிழ்ச்சந்திரன் டெக்னிக்கல் சர்வீசுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை நகர தெற்கு கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தென் மண்டல ஐஜியாகவும், தென் மண்டல ஐஜி டாக்டர் என் கண்ணன் தெற்கு சென்னை கூடுதல் கமிஷனராகவும், வடசென்னை கூடுதல் கமிஷனர் ஆஸ்ரா கார்க் வடக்கு மண்டல ஐஜியாகவும், அங்கிருந்த நரேந்திரன் நாயர் வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு சேலம் போலீஸ் கமிஷனராகவும், அங்கிருந்த விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாகவு, ஆயுதப்படை ஐஜி லட்சுமி திருப்பூர் போலீஸ் கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.