சட்டம் ஒழுங்கு, ரவு­டிகள் ஒழிப்பில் கவனம் – போலீ­ஸ் கமி­ஷனர் அருண் பேட்­டி

120

சென்னை நகரில் ரவு­டிகள் ஒழிக்­கப்­பட்டு சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்­தப்­படும் என்று போலீஸ் கமி­ஷனர் அருண் கூறி­னார்.

சென்னை நகர புதிய போலீஸ் கமி­­ஷ­ன­ராக பொறுப்­பேற்­றுள்ள அருண் இன்று நிருபர்­க­­ளுக்கு அளித்த பேட்­டியில், ”சென்னை நகர போலீஸ் கமி­­ஷ­ன­ராக என்னை அமர வைத்த தமி­ழக முதல்­வ­ருக்கு நன்றி. அவ­­ரது பெயரை காப்­பாற்றும் வ கையில் நடந்து கொள்வேன். தமிழ்­நாட்­டிலும் சரி, சென்னை நக­ரிலும் சரி கடந்­த ஆண்டை விட இந்த ஆண்டு கொலைகள் குறைந்­­துள்ளன. குற்­றங்­களை மேலும் குறைப்­ப­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­வேன். ரவு­டி­க­ளுக்கு எந்த மொழி புரி­யுமோ அந்த மொழியில் சொல்லி புரிய வைப்போம். காவல்­து­றையில் லஞ்ச ஊழல்கள் கண்­டு­பி­டித்து ஒழிக்­கப்­படும். ஆர்ம்ஸ்­ட்ராங்க் கொலை குறித்து நான் இப்­போது கருத்து கூற விரும்­ப­வில்லை. அது குறித்து விசா­ரணை நடந்து வரு­கி­றது. இவ்வாறு அருண் கூறி­னார்.