சென்­னையில் செயின் பறிப்பு கொள்­ளை­யர்கள் 4 பேர் கைது: 10 பவுன் தங்க நகைகள், 3 பைக்குகள் பறி­முதல்

162

சென்னையில் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்ட வெளிமாநில நபர் உட்பட 4 குற்றவாளிகள் கைது செய்த போலீசார் 10 பவுன் தங்க நகைகள் 3 இரு­ச­சக்­கர வாக­னங்கள் ஆகி­ய­வற்றை பறி­முதல் செய்­த­னர்.

சென்னை பெருநகரில் செயின்பறிப்பு, வாகனங்கள் திருட்டு, செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய (DACO – Drive Against Crime Offendors) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, செயின்பறிப்பு வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஆதம்­பாக்­கத்தில் சிக்­கிய மகா­ராட்­டிரா செயின் கொள்­ளை­யன்

சென்னை, ஆதம்பாக்கம், கணேஷ்நகர், 2வது தெருவைச் சேர்ந்த பத்மாவதி என்ற பெண் அந்த பகு­தியில் மெடிக்கல் ஷாப்­பிற்கு சென்றுவிட்டு ஆதம்பாக்கம், கணேஷ்நகர் 1வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்­போ­து அங்கு இரு­சக்­கர வாக­னத்தில் வந்த நபர் பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 2 தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து பத்மாவதி ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. தனிப்­படை போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து, மேற்படி தங்கச் ங்கிலி பறிப்பு குற்றத்தில் ஈடுபட்ட மகா­ராட்­டிரா மாநி­லத்தைச் சேர்ந்த அமோல் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 7 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் கைது செய்யப்பட்ட அமோல் தனது சொந்த மாநிலாமான மகராஷ்டிராவிலிருந்து சென்னைக்கு வந்து விடுதிகளில் தங்கியிருந்து, இருசக்கர வாகனங்ககளை திருடியபின்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இவர் மீது 2019ம் ஆண்டு அண்ணாநகர் காவல் நிலையத்திலும், 2020ம் ஆண்டு திருமங்கலம் அண்ணாநகர் காவல் நிலையங்களிலும், 2021 ம் ஆண்டு கோட்டூர்புரம், சைதாப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களிலும் மொத்தம் 10 செயின் பறிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­ட­னர். பெங்களூரு, தெலுங்கானா- ஹைதரபாத், மகாராஷ்டிரா – மும்பை ஆகிய மாநிலங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

­கோட்­டூர்­புரம் போலீசார் கைது செய்த 2 கொள்­ளை­யர்கள்

சென்னை, தரமணி, கலிக்குன்றம், 2வது தெருவில் சுபத்ரா (64). 29.04.2024 அன்று இந்திரா நகர் இரயில் நிலையம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மேற்படி சுபத்ரா கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் எடையுள்ள தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து சுபத்ரா J-4 கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மேற்படி செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட வில்­லி­வா­க்கம் சூர்யா (26), பெரம்பூர் சத்யா ஆகிய இரு­வ­ரையும் நேற்று கைது செய்­த­னர். அவர்களிடமிருந்து 2 சவரன் தங்க நகைகள், 1 செல்போன் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சூர்யா மீது 34 வழக்குகளும், சத்யா மீது 12 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது. மேற்படி இருவரும் V-1 வில்லிவாக்கம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் ஆவர்.

கீழ்ப்­பா­க்­கம் போலீசில் ஒரு­வ­ர் கைது

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் அபிநயா (22) பச்சையப்பன் கல்லூரி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் மேற்படி அபிநயா கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து அபிநயா G-3 கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மேற்படி செயின் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட ராம்குமார், வ/28, த/பெ.சௌந்தரராஜன், சூளைமேடு, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 சவரன் தங்கச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சூர்யா, சத்யா மற்றும் ராம்குமார் ஆகிய 3 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றொரு குற்றவாளி அமோல் இன்று (05.05.2024) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.