ஆவடி காவல் ஆணை­ய­ர­கத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

195

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று (08.05.2024) போலீஸ கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.

ஆவடி போலீஸ் கமி­­ஷனர் சங்கர் தலை­மையில் நடந்த இந்தக் குறைதீர்ப்பு முகாமில் ஆவடி கூடுதல் காவல் ஆணையாளர் ராஜேந்­தி­­ரன், ஆவடி துணை கமி­ஷனர் அய்­மன்­ஜமால் மற்­றும் செங்குன்றம், மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையாளர்கள், காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டனர். பொதுமக்களிடம் 50 புகார் மனுக்கள் நேரடியாக பெறப்பட்டு, உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குறைதீர்க்கும் முகாம் வாரம் தோறும் புதன் கிழமை நடைபெறும் என ஆவடி காவல் ஆணை­ய­ரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்­ள­து.