சென்னை நகரில் குட்கா போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் அந்தந்த காவல் மாவட்ட துணைக்கமிஷனர்கள் அதிரடி ரெய்டு நடத்தி தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் குட்கா விற்பனைக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ரகசிய விசாரணையில் அது உறுதியானது. இதைத் தொடர்ந்து சென்னையில் 6 சப்- இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள், 14 போலீசார் என 22 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.