மெரினாவில் போலீஸ் என கூறி ஜி பே மூலம் பணம் பறித்த பலூன் கடைக்காரர் கைது

174

சென்னை, மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் என கூறி, மிரட்டி G Pay மூலம் பணம் ரூ. 12,000- பெற்று ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, மேடவாக்கம், விக்னராதபுரம் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ் (41). கடந்த 22.09.2023 அன்று இரவு, மெரினா, பார்த்தசாரதி ஆர்ச் எதிரில் உள்ள மெரினா கடற்கரை மணற்பரப்பில் அவரது பெண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் தன்னை போலீஸ் எனக்கூறி, மேற்படி பிரகாஷ் மற்றும் அவரது பெண் நண்பரை மிரட்டி, பிரகாஷிடம் இருந்து G pay மூலம் பணம் ரூ. 12,000- பெற்றுச் சென்றுள்ளார். இது குறித்து பிரகாஷ், மெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில் பணம் பறித்த நபர் அதே பகுதி நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த அசர் அலி (வயது 30) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து க், நொச்சிகுப்பம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ. 12,000- மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட அசர்அலி மெரினா கடற்கரை பகுதியில் பலூன் கடை வைத்திருப்பதும், போலீஸ் எனக்கூறி பிரகாஷிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததும், இவர் மீது ஏற்கனவே அடையாறு மற்றும் வியாசர்பாடி காவல் நிலையங்களில் தலா 1 திருட்டு வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அசர் அலி, விசாரணைக்குப் பின்னர், நேற்று (26.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.