கொடுங்கையூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய 2 நபர்கள் கைது

176

சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 4வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ் (38). ஆட்டோ ஓட்டுநர்.  கடந்த 26.09.2023 அன்று இரவு தனது வீட்டின் அருகில், அதே பகுதியைச் சேர்ந்த முகமது அலி மற்றும் புகழேந்தி ஆகிய இருவருடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த முகமது அலி மற்றும் புகழேந்தி ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி தன்ராஜை கை மற்றும் கல்லால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். காயமடைந்த தன்ராஜ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காயமடைந்த தன்ராஜின் தம்பி அருண்குமார் என்பவர் P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த முகமது அலி (37), புகழேந்தி (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட முகமது அலி மீது ஏற்கனவே 1 குற்ற வழக்கு உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் நேற்று (27.09.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.