தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணனின் அரிய முயற்சி: 1.13 லட்சம் பொதுமக்களிடம் மாற்றத்தை தேடி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

170

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி வடபாகம், குரும்பூர், ஆறுமுகநேரி

மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதுவரை 3,603 “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு கூட்டங்கள் காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,13,904 பொதுமக்களிடம் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.