தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை 18.09.2023 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட பல்வேறு அமைப்பினை சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் அனுமதி கோரியதின் பேரில் மொத்தம் 693 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சிலைகள் பாதுகாப்பு பணிக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், காவல் இணை ஆணையாளர் மூர்த்தி மேற்பார்வையில், மூன்று காவல் துணை ஆணையாளர்கள், ஆறு காவல் உதவி ஆணையாளர்கள், 26 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 700 காவல் துறையினர் மற்றும் 50 ஊர் காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சிலை வைக்கும் அமைப்பினர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தி கூட்டத்தில் சிலைகள் வைத்த நாளிலிருந்து கடலில் எடுத்து சென்று கரைக்கும் நாள்வரை எவ்வித சட்டம் ஒழுங்கு மற்றும் மதம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏதும் ஏற்படா வண்ணம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் அனைத்து சிலைகள் வைக்கும் இடங்கள், சிலைகளை கரைக்க எடுத்துச் செல்லும் வழித்தடங்களில் பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகர காவல் எல்லையில் வைத்து பிரதிஷ்டை செய்த சிலைகளை 23.09.2023 & 24.09.2023 ஆகிய இரு நாட்களில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட நீலாங்கரை பாலவாக்கம் பல்கலை நகர் கடற்கரை, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கோவளம் குன்றுக்காடு கடற்கரை என இரு இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் கீழ்க்கண்ட 6 வழித்தடங்களில்
அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
1. ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள பல்லாவரம் வெட்டர் லைனில் ஒன்று சேர்ந்து அரைவா பாயிண்ட் வழியாக சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கொண்டு செல்லப்படும்
2. ஜிஎஸ்டி ரோட்டில் தாம்பரம் வள்ளுவர் குருகுலம் அருகே U-Turn செய்து தாம்பரம் மேம்பாலம் வழியாக மேடவாக்கத்தில் ஒன்று சேர்ந்து வேளச்சேரி மெயின் ரோடு கைவேலி சந்திப்பு வழியாக சென்னை மாநகர காவல் எல்லைக்குள் கொண்டு செல்லப்படும்
3) வண்டலூர் கேளம்பாக்கம் ரோடு வழியாக தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட கோவளம் குன்றுக்காடு குப்பத்தில் உள்ள கடற்கரைக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்படும்.