நிலுவையில் இருந்த 96 புகார் மனுக்களுக்கு தீர்வு: ஆவடி கமிஷனர் சங்கர் நடவடிக்கை

190

ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி ஆவடி கமிஷனர் சங்கர்

உத்தரவின் பேரில் கடந்த 05.07.2023ம் தேதி முதல் தொடர்ச்சியாக புதன் கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று 30.08.2023 நடத்தப்பட்ட குறை தீர்ப்பு முகாமில் நிலுவையில் இருந்த 126 புகார் மனுக்களில் 96 மனுக்கள் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 60 புதிய மனுக்களை உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புகார்கள் முதலமைச்சர் என பெயரிடப்பட்டு வந்திருந்தன. அது போன்ற 7 மனுக்களின் மனுதாரர்களை நேரில் வரவழைத்து உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.