கக்கன் படத்துக்கு கேளிக்கை வரி ரத்து: முதல்வருக்கு நன்றி சொன்ன கக்கன் வாரிசுகள்

323

‘கக்கன்’ திரைப்படதற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து தமிழக முதல்வருக்கு கக்கன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ராஜேஷ்வரி, IPS., டிஐஜி, சேலம் சரகம்.

மக்களவை உறுப்பினர், தமிழக போலீஸ் மந்திரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தது மட்டுமின்றி எளிமையின் சிகரமாக வாழ்ந்து மறைந்தவர் கக்கன். ‘கக்கனின்’ வாழ்க்கை வரலாறு கக்கன் என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி விஜயகுமார்,  தீயணைப்புத்துறை இணை இயக்குநர்.

இந்தப் படத்தை ஜோசப் பேபி தயாரித்துள்ளார். அத்துடன் அவரே கக்கன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபு மாணிக்கம், ரகோத் விஜய் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்துக்கு தேவா இசையமைத்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இசை மற்றும் ட்ரெய்லரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். அதனை கக்கனின் பேத்தியுமான தமிழக காவல்துறை சேலம் சரக டிஐஜி ராஜேஷ்வரி பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கக்கன் திரைப்படத்திற்கான கேளிக்கை வரிக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. கக்கன் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளித்ததையொட்டி தமிழகத்தில் வாழும் கக்கனின் குடும்பத்தினர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கக்கனின் மகள் கஸ்தூரிபாயின் மகளான ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ்வரி தமிழக காவல்துறையில் சேலம் சரக சட்டம் – ஒழுங்கு டிஐஜியாக உள்ளார். அதே போல கக்கனின் மகன் பத்மநாபனின் மகளான மீனாட்சி விஜயகுமார் தமிழக தீயணைப்புத்துறையில் இணை இயக்குநராக தாம்பரம் பயிற்சியகத்தில் உள்ளார். இவர்கள் உள்பட கக்கனின் வாரிசுகள் தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.