‘கக்கன்’ திரைப்படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

232

கக்கன் திரைப்படதற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களவை உறுப்பினர், தமிழக அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த ‘கக்கனின்’ வாழ்க்கை வரலாறு கக்கன் என்ற பெயரில் படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜோசப் பேபி தயாரித்துள்ளார். அத்துடன் அவரே கக்கன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபு மாணிக்கம் மற்றும் ரகோத் விஜய் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்துக்கு தேவா இசையமைத்துள்ளார்.

படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இசை மற்றும் ட்ரெய்லரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இவ்விழாவில் கக்கனின் பேத்தியுமான தமிழக காவல்துறை சேலம் சரக டிஐஜி ராஜேஷ்வரி கலந்து கொண்டார். இந்நிலையில் கக்கன் திரைப்படத்திற்கான கேளிக்கை வரிக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.