தங்கும் விடுதியில் விபசாரம்: ராஜஸ்தான் புரோக்கர் கைது: 3 அழகிகள் மீட்பு

180

சென்னை மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (08.08.2023), பெரியமேடு, வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கண்காணித்தனர்.

அப்போது, அங்கு 2 அறைகளில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி தங்கும் விடுதியில் சோதனைகள் மேற்கொண்டனர். அதனையடுத்து அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய ராஜஸ்தானைச் சேர்ந்த ஜப்பார் பூரி (31) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த அந்தமான் நிக்கோபார், டில்லி மற்றும் கோவாவைச் சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட எதிரி ஜாப்பர் பூரி விசாரணைக்குப் பின்னர் நேற்று (08.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.