கொடுங்கையூர் பகுதியில் வாலிபரிடம் கத்தியை மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது.

183

சென்னை, வியாசர்பாடி, எம்.கே.பி நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ், 19. நேற்று (08.08.2023) மதியம் கொடுங்கையூர், சின்னான்டி மடம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு நபர் மேற்படி சந்தோஷை வழிமறித்து, தகாத வார்த்தைகள் பேசி, கையால் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, சந்தோஷ் வைத்திருந்த பணம் ரூ. 300-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சந்தோஷ், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொடுங்கையூர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்கயைூர், சேலைவாயலைச் சேர்ந்த சுகுமார் (எ) ஸ்பீடு சஞ்சய், 19 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி சுகுமார் (எ) ஸ்பீடு சஞ்சய் மீது, கொலை, கொலைமுயற்சி, கஞ்சா, வழிப்பறி, திருட்டு உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சுகுமார் (எ) ஸ்பீடு சஞ்சய், விசாரணைக்குப்பின்னர், நேற்று (08.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்
.