19 காவல் அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டு சான்றிதழ்

190

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர், சிறப்பாக பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை நகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்துவது. அந்த வகையில் இந்த வாரம் சிறந்த பணிபுரிந்த 19 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் கமிஷனரிடம் நேரில் பாராட்டு பெற்றனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலஷ்மி, தலைமைக்காவலர் அமுதபாண்டியன், காவலர் முத்துப்பாண்டி, பெண் காவலர் லிசா, ஆயுதப்படை காவலர்கள் ஆனந்த், ராமசாமி, திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் மோகன்ராஜ்,

பெண்காவலர் அபிதாபேகம், இராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் (தற்போது மீனம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர்) விஜயலஷ்மி, காவலர் புவனேசன், ஜெ.ஜெ நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகிராமன், தலைமைக்காவலர் சுப்பிரமணியன், ஆயிரம் விளக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரகாசம், தலைமைக்காவலர்கள் தேவராஜ், கோபிநாதன், முதல்நிலைக் காவலர் ராஜ்குமார், காவலர் பாண்டியன், துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆகியோர் இன்று கமிஷனர் சந்தீப்பிடம் நற்சான்றிதழ் பெற்றனர்.

தலைமைக்காவலர் அசோக்குமார் என மொத்தம் 4 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 13 காவல் ஆளிநர்கள் என 19 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (29.07.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய காவல் குழுவினர் அரசு மருத்துவமனைகளில் வயதான பெண்களிடம் உதவி செய்வதாக கூறி கவனத்தை திசை திருப்பி தங்க நகைகள் திருடியது தொடர்பான 63 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்தும், திருவல்லிக்கேணி காவல் குழுவினர் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை பெற்று தந்தும், ராயப்பேட்டை காவல் குழுவினர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை பெற்று தந்தும், ஜெ.ஜெ நகர் காவல் குழுவினர் நண்பரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை பெற்று தந்தும், நுங்கம்பாக்கம் காவல்குழுவினர் 4 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 குற்றவாளிகளை கைது செய்தும், J-9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் குழுவினர் வாகன தணிக்கையின் போது, திருடுபோன 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.