சென்னையில் திருநங்கைகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

169

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக திருநங்கைகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


சென்னை நகர போக்குவரத்து காவல்துறை சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3232 உடன் இணைந்து திருநங்கைகள் மூலம் பல்வேறு சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டது. சிவப்பு சிக்னலில் நிற்கும் போது வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது 6 மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழுவினர் ஏர் ஹோஸ்டர்ஸ் உடை அணிந்து சீட்பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை கை சிக்னல்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஒரு நிமிடம் சத்தமாக ஒலி எழுப்பினர்.


இது அண்ணாநகர் வளைவில் இருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. சென்னை நகர போக்குவரத்து (வடக்கு) துணைக்கமிஷனர் சரவணன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். திருநங்கைகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த பயிற்சி மற்றும் அதிகாரத்தை அளித்தல் ஆகியவற்றை சாலை பாதுகாப்பு மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், ருக்மணி ஆகியோர் மூலம் அளிக்கப்பட்டது. அண்ணாநகர் ரவுண்டானா, திருமங்கலம் சந்திப்பு ஈகா சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு மற்றும் நந்தனம் சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த சாலை பாதுகாப்பு பிரச்சாரம் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரச்சாரத்தின் முடிவில் வாகன ஓட்டிகளுக்கு முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன.