ஆவடி காவல் ஆணையரகத்தில் கமிஷனர் சங்கர் ஐபிஎஸ் தலைமையில் 77வது சுதந்திர தின விழா

169

சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் 77வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இந்திய தேசியக் கொடியை

ஏற்றி வைத்து ஆவடி காவல் ஆணையராக ஆயுதப்படை காவல் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஆவடி ஆயுதப்படை காவலர்கள் Warrior Parade, மற்றும் Silent Parade அணிவகுப்பு நடைபெற்றது. இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பல்வேறு சமுதாய நல பணிகளை மேற்கொண்ட (16) சமூக ஆர்வலர்களை பாராட்டி கமிஷனர் சங்கர் பொன்னாடை அணிவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

மேலும், ஆவடி காவல் ஆணையரகத்தில் மெச்ச தகுந்த பணிகளை ஆற்றிய சுமார் (54) காவல் உதவி ஆனையாளர்கள் முதல் காவலர்களுக்கு கமிஷனர் சங்கர் பாராட்டு சான்றிதழ் உடன் கூடிய வெகுமதி வழங்கினார். இந்திய சுதந்திர தினத்தின் நினைவை போற்றும் வகையில் பள்ளிக் குழந்தைகள், காவலர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் பொதுமக்கள் சுமார் (1000) நபர்களுக்கு காலை சிற்றுண்டி ஆவடி போலீஸ் கண்வெண்சன் சென்டரில் வழங்கப்பட்டது.

சுதந்திர தின நிகழ்ச்சியில் ஆவடி காவல் இணைக்கமிஷனர் விஜயகுமார், துனை ஆனையாளர்கள் செங்குன்றம், ஆவடி, மத்திய குற்றபிரிவு மற்றும் காவல் ஆளினர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், ஊர் காவல் படைபிரிவினர், போக்குவரத்து வார்டண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.