2 மாதங்களில் 358 போதைக்கடத்தல் குற்றவாளிகள் கைது: 1486 கிலோ கஞ்சா பறிமுதல்: அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் அதிரடி நடவடிக்கை
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 358 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 1,486 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அமலாக்கப்பிரிவு மற்றும் பேோதைப் பெொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு பேோலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐஜி ராதிகா, IPS.,
போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மேற்பார்வையில், ஐஜி ராதிகா தலைமையில் மாநிலம் முழுவதும் போதைப்பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மற்றும் நடப்பு பிப்ரவரி மாதங்களில் போதைப்பொருள் மற்றும் மன மயக்கப்பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 18 பெண்கள் உட்பட மொத்தம் 358 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 1486 கி.கி. கஞ்சா மற்றும் 2,200 டைடால் மாத்திரைகள் உள்ளடக்கிய 1.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் 17 இருசக்கர வாகனங்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய வழக்காக கடந்த 11.02.2024 அன்று சென்னை, பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜிபான் பிஸ்வாஸ், (30,) பல்ராம் புஜாரி, (25) மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சாஷிகுமார் (32) ஆகிய மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 கி.கி. உலர் கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 15.01.2024 அன்று மதுரை, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவினர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த ராஜபாண்டி (27), செல்வம் @ செல்வராஜ் (36) மற்றும் சிவப்பிரகாஷ் (24) ஆகிய மூன்று குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 10 இலட்சம் மதிப்புள்ள 100 கி.கி. உலர் கஞ்சா மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர். போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 17 குற்றவாளிகள் பல்வேறு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மதுரை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவில் 22 கிலா கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கு 31.01.2024 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதே போல் திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவில் 20 கிலேோ கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் என்பருக்கு 07.02.2024 அன்று 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.