காங்­கிரஸ் முன்னாள் கவுன்­சி­லரின் ரூ. 12 கோடி மதிப்புள்ள நிலத்தை அப­க­ரித்த இருவர் கைது: தாம்­பரம் காவல் ஆணை­ய­ரகம் நட­வ­டிக்­கை

183

சென்னை மயி­லாப்­பூரைச் சேர்ந்­­­தவர் மங்கள் ராஜ் (வயது 79). தென்­சென்னை மாவட்ட முன்னாள் காங்­கிரஸ் தலை­வ­ராக இருந்த இவர் கவுன்­சி­ல­ரா­கவும் இருந்தார். கடந்த 2007ம் ஆண்டு தாம்­பரம் பகு­தியில் ரூ. 70 லட்சம் மதிப்­புள்ள 66 சென்ட் நிலத்தை மங்­கள்ராஜ் வாங்­கி­­யி­ருந்­தார்.­ இதன் தற்­போ­தைய மதிப்பு ரூ. 12 கோடி. இந்த நிலத்தை மர்ம நபர்கள் போலி ஆவணம் மூலம் அப­க­ரித்­த­தாக சென்னை நகர போலீஸ் கமி­ஷனர் அலு­வ­ல­கத்தில் மங்­கள்ராஜ் கடந்த 2021ம் ஆண்டு புகார் அளித்தார். அது தொடர்­பாக நில­மோ­­சடி தடுப்­புப்­பி­ரிவு

போலீசார் விசா­ரணை நடத்­தினர். இதில் மங்­கள்ராஜ் நில­த்தை குரோம்­பேட்­டையைச் சேர்ந்த நாகராஜ், அவ­ரது சகோ­தரர் கோபு ஆகியோர் அப­க­ரித்­ததும், அவர்­க­ளுக்கு திமு­கவைச் சேர்ந்த இளங்­கோவன் அவ­ரது மனைவி ஜெய­லட்­சுமி மற்றும் ராம­மூர்த்தி ஆகியோர் உடந்­தை­யாக இருந்­தது தெரிய­வந்­தது. அது தொடர்­பாக மத்­திய குற்­றப்­பி­ரிவு போலீசார் வழக்­குப்­ப­திவு நிலம் தாம்­பரம் காவல் ஆணை­ய­ர­க எல்­லையில் வந்­ததால் வழக்கு விசா­ர­ணை­ அங்கு மாற்­றப்­பட்­டது. துணைக்­க­மி­ஷனர் சுப்­பு­லட்­சுமி மேற்­பார்­வையில் இன்ஸ்­பெக்டர் சிவக்­குமார் விசா­ரணை நடத்தி குற்­ற­வா­ளிகள் நாக­ராஜன், கோபு ஆகியோர் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டனர். தலை­ம­றை­வா­க இருக்கும் ஜெய­லட்­சுமி, இளங்­கோவன், ராம­மூர்த்­தி ­ஆ­கி­யோரை தேடி வரு­கின்­றனர்.