19 காவல் ஆளி­நர்­களின் பிள்­ளை­க­ளுக்கு ரூ. 4.87 லட்சம் கல்வி உத­வித்­தொ­கை: கமி­ஷனர் அருண் வழங்­கி­னார்

160

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 19 காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு ரூ. 4.87 லட்சம் கல்வி உதவி தொகையை வழங்­கி­னார்.

சென்னை பெரு­ந­கர காவல் ஆணையாளர் அருண் இன்று (19.11.2024) மாலை வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் 19 காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு, தமிழ்நாடு அரசின் 2023-, 2024 முதலாம் கல்வி ஆண்டிற்கான சிறப்பு கல்வி உதவி தொகையினை ஒவ்வொருவருக்கும் ஆணையாளர் அருண் தனித்தனியாக வழங்கினார்கள். மொத்தம் ரூ. 4,87,566- வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சயில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) கபில்குமார் சி சரட்கர், கயல்விழி, (தலைமையிடம்), துணை ஆணையாளர் மெஹலினா ஐடன் (தலைமையிடம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.