18 ஐபிஎஸ் அதி­கா­ரிகள் அதி­ரடி மாற்றம்: தமிழக அரசு உத்­த­ர­வு

145

தமி­ழ­கத்தில் 18 ஐபிஎஸ் அதி­கா­ரி­களை மாற்றம் செய்து தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

அதன் விவரம் வரு­மாறு:–  தாம்­பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அங்­கி­ருந்து மாற்­றப்­பட்டு அம­லாக்­கப்­பி­ரிவு கூடுதல் டிஜி­பி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். மாநில குற்ற ஆவ­ணக்­காப்­பக கூடுதல் டிஜிபி அபின் தினேஷ் மோடக் தாம்­பரம் காவல் ஆணை­ய­ராக மாற்­றப்­பட்­டுள்­ளார். ஆயுதப்­படை கூடுதல் டிஜிபி ஜெயராம் மாநில குற்ற ஆவ­ணக்­ கா­ப்­ப­கத்­­துக்­கும், காத்­தி­ருப்போர் பட்­டி­யலில் இருந்த மகேஷ்­குமார் அகர்வால் ஆயு­தப்­படை கூடுதல் டிஜி­பி­யா­கவும், சிபி­­சி­ஐடி கூடுதல் டிஜிபி வெங்­கட்­ராமன், நிர்­வா­கப்­பி­ரிவு ஏடி­ஜி­பி­யா­கவும், வினித்தேவ் வாங்கடே தலை­மையிட ஏடி­ஜி­பி­யா­கவும், சைபர்­கிரைம் ஏடி­ஜிபி சஞ்­சய் குமார் கட­லோர காவல் குழு­மத்­துக்கும், அங்­கி­ருந்த சந்தீப் மிட்டல் சைபர்­கி­ரை­முக்­கும், ராஜீவ்­குமார் குழந்­தைகள், பெண்கள் குற்­றத்­த­டுப்புப் பிரி­விற்கும், அங்­கி­ருந்த தமிழ்ச்­சந்­திரன் டெக்­­னிக்கல் சர்­வீ­சுக்கும் மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.

சென்னை நகர தெற்கு கூடுதல் கமி­ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா தென் மண்­டல ஐஜி­யா­கவும், தென் மண்­டல ஐஜி டாக்டர் என் கண்ணன் தெற்கு சென்னை கூடுதல் கமி­ஷ­ன­ரா­கவும், வட­சென்னை கூடுதல் கமி­ஷனர் ஆஸ்ரா கார்க் வடக்கு மண்­டல ஐஜி­யா­கவும், அ­ங்­கி­ருந்த நரேந்­திரன் நாயர் வட­சென்னை கூடுதல் போலீஸ் கமி­­ஷ­ன­ரா­கவும் மாற்­றப்­பட்­டுள்­ளனர். திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு சேலம் போலீஸ் கமி­ஷ­ன­ரா­க­வும், அங்­கி­ருந்த விஜ­ய­கு­மாரி ஆயு­தப்­படை ஐஜி­யாகவு, ஆயு­தப்­படை ஐஜி லட்­சுமி திருப்பூர் போலீஸ் கமி­ஷ­ன­ரா­கவும் மாற்­றப்­பட்­டுள்­ளனர்.