காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 157வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மஹ்லரி ஆலிம் , ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா
காயல்பட்டினம் மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் 157வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மஹ்லரி ஆலிம் , ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா மஹ்லரா வளாகத்தில் காலை 9 மணி அளவில் சிறப்பு நடைபெற்றது.
மஹ்லரா அரபிக் கல்லூரி-தலைவர் வாவு காதர் சாஹிப் தலைமையில் நடந்த இவ்விழாவில் ஸ்டார் அப்துல் காதிர் வரவேற்புரை வழங்கினார். நிகழ்வின் ஆரம்பமாக கிராஅத் என்னும் இறைமறை வசனங்களை முஹ்யித்தீன் தவ்ஹீத் ஓத, ஜமாத்துல் உலமா குமரி மாவட்ட தலைவர் & குமரி மாவட்ட அரசு தலைமை காஜி மவுலவி அபூ ஷாலிஹ் பாகவியும், மௌலவி ஏரூர் சம்சுதீன் மதனி அல் காதிரி ஆகியேோர் சிறப்பு நிகழ்த்தினார்கள். பட்டமளிப்பு வாழ்த்துரையை அப்துர் ரஹ்மான் ஹசனி தங்கள் (மஹ்லரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர்) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் 25 வருட காலமாக பேராசிரியராக பணியாற்றிய மௌலவி அஸ்பர் அஸ்ரபியை கௌரவிக்கும் முகமாக கல்பில் நிறைந்த கௌதுல் அஹ்லம் அவர்களின் ஷீல்டும், பொற்கிழியும் மஹ்லரி முன்னாள் மாணவர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
நிகழ்வின் தொடராக வாழ்த்துரைகளை மௌலவி அபூ மன்சூர் ஆலிம், மௌலவி அஹ் மத்அப்துல் காதிர் ஆலிம்,மவ்லவி சுஹைப் ரஹ்மான், மவ்லவி முஹம்மத் இம்ரான், மவ்லவி தவ்பிக் அஹமத், மவ்லவி முஹம்மது அசாருதீன், ஹாஃபிழ் ஷேக் தாவூத்,ஹாஃபிழ் செய்யதுஅப்பாஸ் அலி, மவ்லவி மன்னர் அப்துல்லாஹ், மவ்லவி முகம்மது ஜு ல்பிகார் அலி, ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் தொடராக ஏற்புரையை மவ்லவி அஸ்பர் அஸ்ரபி நிகழ்த்தினார்கள். தொடர்ந்து 17 நபர்களுக்கு ஆலிம் பட்டமும், ஆறு நபர்களுக்கு ஹாபில் பட்டமும் சிறப்பு வருகையாளரான, மௌலவி அஸ்செய்யது அலி பாபக்கி தங்கள்( அகில இந்திய சுன்னத் ஜமாஅத் ஜம்மியத்துல் முஅல்லிமீன் -தலைவர் &மர்க்கஸ் சகபாதுல் சுன்னியா கோழி கோடு -தலைவர் )கரங்களினால் வழங்கப் பட்டது.
இவ்விழாவில் முஹம்மது சுஹைல் ஷரீப், முகம்மது சபீர், தாசின் முஹம்மது அப்துல்லாஹ், முஹம்மது ஆசிக், ஹம்சா, முஹம்மது உவைஸ், முஹம்மது தாஹா, முஹம்மது அர்சாத், ராசீத், முஹம்மது ஷாபியி, மாஹி ன் அபூபக்கர், அஸ்லம், ஹசன், முஹம்மது மர்வான், முஹம்மது அஸ்கர், சபிஸ் (கே )ஸலாஹ், அஜ்மல் மன்சூர் மற்றும் முஹ்யித்தீன் அஹ்னாப், செய்யது ஹசன் நைனா சாஹிப், உமர் அஸ்லாம், முஹம்மது அபூபக்கர், தைக்கா சாஹிப், முஹம்மது முஹையித்தீன் ஆகியேோர் ஹாபில் பட்டமும் பெற்றனர்.
நிகழ்ச்சி தொகுப்பினை மௌலவி முஹம்மது அன்வரி தொகுத்து வழங்க விழாவின் இறுதியாக நன்றி உரையை கலீல் ரஹ்மான் (மஹ்லரா நிர்வாக குழு உறுப்பினர் நிகழ்த்தினார். மேலும் விழாவில் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முஹ்யித்தீன் தம்பிதுரை ஆடிட்டர், நகராட்சி தலைவர் முத்து முஹம்மது ஆலிம், திருவிதங்கோடு தாஜூத்தீன் ஆலிம், நிஜாமுத்தீன் ஆலிம்,சமூக ஆர்வலர்கள் சட்னி சையது மீரான், ஜெஸ்முத்தீன், முகமது சமீம், தோல் ஷாப் மொய்தீன் அப்துல் காதர் மற்றும் ஆன்றோர்களும் சான்றோர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்