சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர், சென்னை பெருநகரம் முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலைப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பல்வேறு போக்குவரத்து அமலாக்க பணிகள், ரோந்து பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெருநகர போக்குவரத்து காவல் துறையினர். விழிப்புணர்வு பிரச்சாரங்களுடன் கூடுதலாக, சென்னை பெருநகரம் முழுவதும் சோதனைகள் மற்றும் ANPR கேமராக்கள், 2D வேக ரேடார் அமைப்பு மற்றும் interceptor வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் போன்ற தொழில்நுட்பங்கள் உதவியுடன் வேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்து போக்குவரத்து அமலாக்க உத்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைத்துள்ளன. கடந்த 2024ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 25.04.2025 நிலவரப்படி 2025 ஆம் ஆண்டில் இறப்புகள் 14% குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 25.04.2024 வரை 173 உயிரிழப்புகள் நடந்துள்ளது. இந்தாண்டு இது வரை 149 உயிரிழப்புகள் நடந்துள்ளது. விபத்துகளைக் குறைப்பதற்கும், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை வழங்கி, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் பணி தொடரும்.