சென்ன நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய தலைமையிலான காவல் குழுவினர் காவல் குழுவினர் நேற்று (31.08.2023) புழல், காவாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த திருவள்ளூர், திருப்பாலைவனத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம், 34 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரம் விசாரணைக்குப் பின்னர் நேற்று (31.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.